மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
பைல் படம்
நாகமரையில் காவிரி கரையோரத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள நாகமரை பகுதியில் சேலம் மாவட்டம் மேச்சேரி செட்டிப்பட்டி சேர்ந்த குப்புசாமி மற்றும் சுந்தரி தம்பதியினர் ஏரியூர் அருகே உள்ள நாகமரை காவிரி கரையோர பகுதியில் தற்காலிகமாக குடிசை அமைத்து காவிரி ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தனர்.
நேற்று வழக்கம் போல் காவிரி ஆற்றல் மீன்பிடித்து விட்டு திரும்பிய போது இடி மின்னலுடன் மழை பொழிந்து நிலையில் சுந்தரி வீட்டின் வெளியே இருந்ததாக தெரிகிறது திடீரென அவரை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயர்ந்தார் இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story