மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
சாலை விபத்து 
ஆத்தூர் அருகே உடையார்பாளையத்தில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கெங்கவல்லி :ஆத்தூர் உடையார்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு, கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கமலா (வயது 55). சம்பவத்தன்று இவர் ஆத்தூர் உடையார் பாளையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில் கமலா படுகாயம் அடைந்தார்.உடனடியாக ஆத்தூர் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர்மேல் சிகிச்சைக்காக சேலம் அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கமலா நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்துஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story