வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!
X

காவல்துறை விசாரணை


கலசப்பாக்கத்தில் வேலைக்குச் சென்ற இளம் பெண் மாயம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பிளஸ்-2 படித்துள்ளார். இவர் போளூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இளம் பெண்ணின் தாய் கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story