காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சாலை மறியல் 

அரக்கோணம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் ஆண்டர்சன் பேட்டை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் ஊராட்சி நிதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இதற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அரக்கோணம் - நெமிலி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாசில்தார் செல்வி, டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாசில்தார் செல்வி குடிநீருக்கான ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story