பைக்கில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு 

பைக்கில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு 
பைல் படம்
அருமநல்லூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஆண்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் அருள் லாசர். இவரது மனைவி ஜாஸ்மின் கீதா (46). இவர்கள் சம்பவதினம் வேர்க்கிளம்பியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரே பைக்கில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பைக்கின் பின்னால் இருந்த ஜாஸ்மின் கீதா குடைய பிடித்துக் கொண்டிருந்தார். அருமநல்லூர் பகுதியில் வரும்போது ஜாஸ்மின் கீதா பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலன் இன்றி கீதா நேற்று உயிரிழந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story