குட்கா விற்ற பெண் கைது

இளங்கியனூரில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான காவல் துறையினர் நேற்று இளங்கியனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அதேப் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி மனைவி இருசம்மா என்பவர் தனது பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருசம்மாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
