வீட்டில் மது விற்பனை செய்த பெண் கைது - மது பாட்டில்கள் பறிமுதல்.
கைது செய்யப்பட்ட சுந்தர பாய்
அருமனை அருகே சட்ட விரோதமாக வீட்டில் மது விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் மழுவஞ்சேரி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுந்தர பாய் (வயது 53) என்பவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story