அகதிகள் முகாமில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது
காவல்துறை விசாரணை
பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீசார்.
விழுப்புரம் மாவட்டம்,வானூா் வட்டம், அனிச்சங்குப்பம், இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் அ.வேதா (40), பெட்டிக்கடை வைத்துள்ளாா். இவா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து வானூா் போலீஸாா் நேற்று (ஜூன் 13) நிகழ்விடம் சென்று பெட்டிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 பாக்கெட் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story