கிரஷரில் சிக்கி பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

கிரஷரில் சிக்கி பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் சாலை மறியல்

தென்தாமரைகுளத்தில் கிரஷரில் சிக்கி பெண் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் பகுதி சேர்ந்தவர் நாகேந்திரன் மனைவி ஐனா (56) இவர் கடந்த 15 நாட்களாக அதே பகுதியில் உள்ள கிரஷர் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை 6 மணி வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் தாய்க்கு போன் செய்துள்ளார். அப்போது செல்போனை எடுத்த நபர் தங்கள் அம்மாவிற்கு அடிபட்டுவிட்டது என கூறியுள்ளார்.இதையடுத்து அவரது மகன் அலெக்ஸ் என்பவர் சென்று பார்த்த போது உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஐனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து ஐனாவின் கணவர் நாகேந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் கல்குவாரியில் வேலையின் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கிரஷர் நிர்வாகம் இருந்து நடவடிக்கை எடுக்க கேட்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டு, ஐனாவின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து ஈத்தங்காடு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய்சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story