திருச்சி அருகே லாரி டயரில் சிக்கி பெண் பலி: போலீசார் விசாரணை

X
இறந்த பெண்
திருச்சி அருகே லாரி டயரில் சிக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்னை – மதுரை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் ரவுண்டானா பகுதியில் வந்ததும், புதுக்கோட்டை ரோட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது இவர்கள் வந்த பைக்மீது சிமெண்ட் கலவை லாரி மோதியது. இவ்விபத்தில் பைக்கில் பயணம் செய்த இரு பெண்களில் ஒருவர் லாரி டயரில் சிக்கினார். இதில் லாரி அவர் மீது ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இறந்தவரின் உடலை மீட்டு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
