மூதாட்டியிடம் தாலி சங்கிலி திருடிய பெண்ணுக்கு 4 மாதம் சிறை

மூதாட்டியிடம் தாலி சங்கிலி திருடிய பெண்ணுக்கு 4 மாதம் சிறை

செயின் திருடியவர்

கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி திருடிய பெண்ணுக்கு 4 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் முத்து நாயக்கர் காலனியை சேர்ந்தவர் பார்வதி (வயது 65). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பச்சை பட்டினி மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

அங்கு புனிததீர்த்தம் தெளிக்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் அவரிடம் இருந்து 8½ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது குறித்து கொண்டலாம்பட்டியில் உள்ள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டியவர், மதுரை அன்பு நகரை சேர்ந்த மதன் என்ற மாணிக்கம் என்பவரின் மனைவி மீனா என்ற லட்சுமி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மீனாவிற்கு 4 மாதம் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது.

Tags

Next Story