சேலம் ரயில் நிலையத்தில் பெண்ணின் நகை திருட்டு - முதியவர் கைது

சேலம் ரயில் நிலையத்தில் பெண்ணின் நகை திருட்டு - முதியவர் கைது

பைல் படம் 

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பெண்ணின் நகை பையை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சுகிர்தராஜா (வயது 32). இவர் நேற்று முன்தினம் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனது மனைவி அமினாவுடன் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து கொண்டு ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அமினா அமர்ந்திருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது நகை பையை மர்ம நபர் ஒருவர் நைசாக திருடிசென்று விட்டார்.

இதில் 2 கிராம் நகை இருந்தது. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை பையை திருடியது பெங்களூருவை சேர்ந்த முகமது நிஜாம் (61) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story