பெண்கள் உயர்கல்வியை அதிகளவில் கற்கின்றனர்: முன்னாள் டிஜிபி
விழாவில் கலந்து முன்னாள் டிஜிபி
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் விட்டா டே எனப்படும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது.
இதில் பல்கலைக்கழக துணைதலைவர் சங்கர் செல்வம், இணை துணை தலைவர் காதம்பரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறந்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளான ராணுவ விஞ்ஞானம்,பொறியியல் ,காவல்துறை ஆகியவைகளில் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களுக்கு கோப்பைகள் சான்றுகளை வழங்கினார் .
விழா மலரும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பேசுகையில், சான்றோர்களின் வாக்கிற்கேற்ப கல்வி என்பது தான் சிறந்த ஆயுதம் இளைஞர்களை மேம்படுத்தவும் ஆயுதமாகும் காக்கும் ஆயுதமும் கல்வியே பண்டை காலத்தில் ஆயிரத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே கல்வி கற்று எழுத படிக்க தெரிந்தவர்களாக விளங்கினார்கள் ஆனால் இன்று நாடு ,முழுவதும் பெரும்பாலான பெண்கள் உயர் கல்வியை கற்கின்றனர்.
இதன் மூலமே நாடு முன்னேற்றமடையும் சமதர்ம சமுதாயமும் சமூகநீதியும் சம உரிமையையும் காத்திட கல்வி ஒன்றே வழிவகுக்கும் என பேசினார். இவ்விழாவில் திரளான முன்னாள் மாணவர்கள் பெற்றோர்களும் அவர்களின் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.