கள்ளச்சாராய விற்பனையை ஒடுக்க வலியுறுத்தி மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தி மாதர் சம்மேளனம் மற்றும் இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தி மாதர் சம்மேளனம் மற்றும் இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க கோரியும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர்ள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டும், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்க கேட்டும் நேற்று, கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் பா.சரண்யா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் க.திவான் ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் க.கண்ணகி, மாவட்டத் துணைத் தலைவர் பி.தாமரைச்செல்வி நிர்வாகிகள் ரேணுகா, பிரியா, அன்னபூரணி இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் மாதாமணி, நிஷாருதீன், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story