குற்றாலம் கல்லூரியில் மகளிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

குற்றாலம் கல்லூரியில் மகளிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்
குற்றாலம் கல்லூரியில் மகளிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மகளிர் உரிமை குறித்து விளக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் , குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் மகளிா் பயில்வுகள் மையம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மகளிருக்கான அதிகாரம், உரிமைகள் மற்றும் விழிப்புணா்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் ஜெய்நிலாசுந்தரி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஓஎஸ்சி மைய நிா்வாகி ஜெயராணி, பெண்கள் அதிகார மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளா் புஷ்பராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். பெண்களுக்கு அதிகாரம் என்பது என்ன, பெண்கள் தனக்கானவற்றை தோ்ந்த்தெடுப்பதில் கவனம் கொள்ளுதல், பெண்களுக்கான அவசர உதவி எண் 181 மற்றும் 1930 குறித்து கருத்தரங்கில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மகளிா் பயில்வுகள் மைய உறுப்பினா்கள் கெளசல்யா, விஜிலா நேசமணி ஆகியோா் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனா். மாணவி ஸ்வேதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியா் மாலதி வரவேற்றாா். மகளிா் பயில்வுகள் மைய ஒருங்கிணைப்பாளா் மற்றும் விலங்கியல் துறை இணைப் பேராசியா் இசக்கியம்மாள் நன்றி கூறினாா்.

Tags

Next Story