ஒசூர் அருகே காங்.வேட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி

ஒசூர் அருகே பிரச்சாரத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளரிடம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதில்லை என பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்ட பெண்கள் கேள்வி எழுப்பியதால் வேறு இடத்திற்கு வேட்பாளர் சென்றார்.

ஒசூர் அருகே பிரச்சாரத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர், ஒசூர் திமுக எம்எல்ஏ ஆகியோரிடம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதில்லை என பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்ட பெண்களை கேள்வி எழுப்பியதால்,

வேறு இடத்திற்கு பறந்த வேட்பாளர் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் போட்டியிட்டு மாவட்டம் முழுவதும் பிரச்சார பணிகளை தீவிரமாக மேற்க்கொண்டு வரும் நிலையில்,

ஒசூர் மாநகர பகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.. அப்போது ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர்(திமுக) சத்யா ஆகியோரும் வேட்பாளருடன் வீதி வீதியாக வாக்குகளை கேட்டனர் குருபட்டி என்னுமிடத்தில் வேட்பாளர் வருகைக்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்களை அழைத்து வந்திருந்தனர்.

பிரச்சார வாகனத்தில் நின்றவாறு திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கி பேசிக்கொண்டிருந்தார்.. அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுவதாக பேசி முடிப்பது தான் அவசரம்.. கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பெண்கள் எங்கே வருகிறது ஆயிரம் ரூபாய்.. வசதி படைத்தவர்களுக்கு தான் காசு தர்ராங்க, கூலி வேலைக்கு போற எங்களுக்கு பணம் வருவதில்லை.

நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம் என கேள்விகளை எழுப்ப.. இது வேலைக்கு ஆகாது என்று நினைத்த வேட்பாளரும், எம்எல்ஏவும் வேறு இடத்திற்கு கிளம்பி சென்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது

Tags

Next Story