மதுரை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்

மதுரை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்

கோப்பு படம் 

மதுரை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெற்று சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம்,

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற மகத்தான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடும் நோக்கில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம்

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும். மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ரூபாய் 1,000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் மாதம் ரூபாய் 1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தின் கீழ் தகுதியான புதிய பயனாளிகளை சேர்த்திட அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற குடும்பத் தலைவி திருமதி.நேசமலர் அவர்கள் தெரிவித்ததாவது,

என் பெயர் நந்தினி. நாங்கள் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை கிராமத்தில் வசித்து வருகிறோம். வீட்டிலேயே சிறிய தையல் இயந்திரத்தை கொண்டு தையல் வேலை செய்து வருகிறேன். எனது கணவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு கிடைக்கின்ற சிறிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்ப பதிவு விளம்பரத்தினை பார்த்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை அருகில் உள்ள பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்கள். நானும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை கொண்டு சென்றேன் அவர்களே எனது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து எனது கையொப்பத்தினை பெற்றுக் கொண்டனர்.

உடனடியாக என்னுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது என தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. 14.09.2023 அன்றே எனது வங்கிக் கணக்கில் 1 ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி எனது தொலைபேசி எண்ணிற்கு வந்தது. இந்த குறுஞ்செய்தியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து எனது கணவர் மற்றும் அருகில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்தேன். இது எங்களின் “உதவித் தொகை இல்லை,

இது எங்களின் உரிமைத் தொகை” என பெருமிதம் கொள்கிறேன். என்னைப்போன்ற குடும்பத் தலைவிகளின் நலனை கருத்திற்கொண்டு இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மதுரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வரும் அனைத்து குடும்பத் தலைவிகள் சார்பாகவும், எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுப்பு இ.சாலி தளபதி எம்.ஏ., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை. ம.கயிலைச் செல்வம், பி.இ., உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.

Tags

Next Story