நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

காலிகுடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்

ஆத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கவில்லை என திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

பின்னர் வார்டு பகுதியில் சென்ற நகர மன்ற தலைவர் லாரிகள் மூலம் உடனடியாக தண்ணீர் வழங்கி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தார்.

Tags

Next Story