மகளிர் உரிமை தொகை கேட்டு எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்

மகளிர் உரிமை தொகை கேட்டு எம்.எல்.ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்
முற்றுகையிட்ட பெண்கள்
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் அசோகனை மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரை ஆதரித்து திருத்தங்கல் 1வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினரும்,பகுதி கழக செயலாளர் அ.செல்வம் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைதொகை கிடைக்கவில்லை எனவும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டனர்.தேர்தலுக்குப் பின்னர் உரிமைத்துறை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பிரச்சாரத்தின் போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story