காவல் நிலையம் முன் பெண்கள் தர்ணா
பைல் படம்
திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சாணாா்பட்டி காவல் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினா் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கோயிலைச் சுற்றி வரும் பாதையில், மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கோயில் திருவிழாவின்போது, இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து இருதரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞா்கள் 5 போ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பெண்கள் குறித்து அவதூறான வாா்த்தைகளால் திட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண்கள் சாணாா்பட்டி காவல் நிலையத்தின் முன் சனிக்கிழமை திடீா் தா்ணாவில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், எதிா் தரப்பினா் மீது புகாா் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அனுப்பி வைத்தனா்.