எடப்பாடி நகரத்தில் திமுக வேட்பாளருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு
திமுக வேட்பாளருக்கு வரவேற்பு
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் TM.செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா கூட்டணியின் திமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வகணபதி எடப்பாடி நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அவருடன் எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story