வால்பாறையில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் துவக்கம்

வால்பாறையிலிருந்து, முடீஸ், ஷேக்கல்முடி, வில்லோனி டாப், புதுக்காடு,பெரிய கல்லார், அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களுக்கு புதிதாக மகளிர் கட்டணமில்லாத 19 பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வால்பாறையில் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது..இதில் கலந்துகொண்ட அமைச்சர் சிவசங்கர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கொடியசைத்து பேருந்துக்கான சேவைகளை தொடங்கி வைத்தனர்.

பின்பு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வால்பாறை மலைப்பகுதியில் இயங்குகின்ற 37 பேருந்துகளில் 19 பேருந்துகள் மகளிர் காண கட்டணமில்லா பயணம் பேருந்தாக அமையும் வகையில் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில்19 வழிதடங்கள் மகளிர் காண கட்டணமில்லா பேருந்து பயணம் வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது..

அந்த வழித்தடத்தில் மகளிர்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தமிழக முழுவதும் தினமும் சராசரியாக 50 லட்சம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. வால்பாறையில் தினமும் 3600 பேர் பயணம் செய்வதாக புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது கட்டணமில்லா பேருந்து பயணத்தால் மற்றும் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சராசரியாக 900 ரூபாய் பெண்கள் சேமிப்பார்கள்.

4000 புதிய பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டு அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.. அந்தத் திட்டத்தில் மலைப்பகுதியில் இயங்குகின்ற பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது இந்த பகுதியில் 87 பேருந்துகள் பழைய பேருந்துகளாக இயங்குகின்றன இந்த ஆண்டு அவைகள் புதிய பேருந்துகளாக மாற்றப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story