விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் பொதுக்கூட்டம்
விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பெண்களின் உரிமையை மீட்டெடுத்தல் குழந்தைகள் பாலியல் தொந்தரவிலிருந்து பாதுகாத்தல் , பெண்கள் அரசியலில் ஈடுபடுதல் , அனைத்து துறையில் உரிமைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றைகளைப் பற்றி எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் விம் மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா பீவி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஐஹாகீர் அருஸி , பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் , ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரஜப்பு நிஷா , விம் மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா , கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியில் 18 வது வார்டு கவுன்சிலர் சகினா பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினர் பைசல் கருத்துரை வழங்கினார். விம் நகர் பொருளாளர் சையது சுல்தான் பீவி நன்றி உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விம் நகர் துணைத் தலைவி அஜிதா பேகம் , துணைச் செயலாளர் அஸ்மது நிஷா , செயற்குழு உறுப்பினர் ரஹ்மத் ரமீஸா பேகம் , முபிதா , நஸ்ரின் தஸ்லிமா , எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.