பெண்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும் - ஆன்மீக சொற்பொழிவாளர் கல்யாணராமன்

பெண்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும் - ஆன்மீக சொற்பொழிவாளர் கல்யாணராமன்

ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் 

திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்றது.

மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

கண்டேன் தேவியை என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது, யாராக இருந்தாலும் பிறரை துன்புறுத்தி விரும்பாத செயலை செய்யக்கூடாது இன்றைக்கு, இல்லாத ஒன்றை சமுதாயத்தில் பிரச்சினையாக்குகிறார்கள். மனம் ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும். அப்போதுதான் சந்தோஷம் ஏற்படும். நாம் எல்லோரிடத்திலும் பக்தியாக, அன்பாக பேச வேண்டும். இன்று எல்லோரிடத்திலும் கவலை இருக்கிறது. கவலை என்று சொல்லாமல் எனது விருப்பம் என்று சொல்ல வேண்டும்.

நமது கஷ்டத்தை போக்குவது கடவுள் மட்டுமே. என்றைக்கும் பெண்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது முதியோர் இல்லத்தில் பெரியவர்களை கொண்டு சேர்ப்பதில் பெருமை இல்லை.பலர் அங்கே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். நமக்கு தகுதி இல்லாத ஒன்றை தூக்கி எறிய வேண்டும் தகுதி உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்க நினைத்தால் உடனே கொடுத்து விட வேண்டும். இதை ராமனிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சீதையைப் பற்றி பெருமை பேசுவதில் பெருமை இல்லை. பெண்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும்.பெண் போகும் வீட்டில் பெருமையுடன் வாழ வேண்டும். ஏக பத்தினி விரதன் என்றால் அது ராமன்தான். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.

சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Tags

Next Story