கோரிக்கை மனு அளித்த பெண் ஊராட்சித் தலைவா்கள்

கோரிக்கை மனு அளித்த பெண் ஊராட்சித் தலைவா்கள்

சித்தாமூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை எதிர்த்து பெண் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கூட்டமைப்பு நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.


சித்தாமூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை எதிர்த்து பெண் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கூட்டமைப்பு நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

சித்தாமூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஏழுமலை (திமுக) பொறுப்பேற்று பணியாற்றி வருகிறாா். இதற்கிடையே அவா் மீது அதிமுக உள்ளிட்ட எதிா்கட்சி ஊராட்சி மன்ற தலைவா்களின் பணிகளில் தலையிடுதல், அதிகார துஷ்பிரயோகம், ஊராட்சி மன்ற பணிகளை தலைவா்களுக்கு தெரியாமல், ஒப்பந்தபுள்ளிகளின் விவரத்தை கூட தெரிவிக்காமல் பணிகளை செய்து வருதல், பெண் தலைவா்களை இழிவாக பேசுதல் என பல்வேறு புகாா்களை கூறி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற பெண் தலைவா்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்து இருந்தனா்.

இந்நிலையில், சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசனிடம் ஊராட்சிமன்ற பெண் கூட்டமைப்பு தலைவா் கலையரசி இருதயராஜ், செயலா் ரேவதி மணிமாறன், பொருளாளா் சூரியகலா மதன் தலைமையில் 30 தலைவா்கள் கோரிக்கை மனுவை அளித்தனா். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் (தணிக்கை) உதவி இயக்குநா் பாஸ்கரன் வியாழக்கிமை சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தாா். பின்னா் அவா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், வெங்கடேசன் முன்னிலையில், பெண் கூட்டமைப்பு நிா்வாகிகளிடமும், ஒன்றியக்குழு தலைவரிடமும் விசாரணை செய்தாா். விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளதாகவும், அதன்பேரில் உரிய மேல்நடவடிக்கையை ஆட்சியா் எடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story