குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!
மறியல்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு பகுதியை சேர்ந்த புதுதெரு மற்றும் அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருச்சி புதுக்கோட்டை செல்லும் புதுதெரு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதால் போக்குவரத்து பாதித்தது அப்பகுதியாக வந்த கனரக வாகனங்களை மற்றும் பேருந்துகளை மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டது நகராட்சி பொறியாளர் நகர் நல அலுவலர் திருக்கோகரணம் காவல் ஆய்வாளர்அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நகராட்சி சார்பில் லாரியில் குடிநீர் கொண்டு உடனே கொண்டு வந்ததை குழாய் மூலம் தண்ணீர் அனுப்புங்கள் இல்லையென்றால் தண்ணீர் வேண்டாம் என்று லாரியை திருப்பி அனுப்பினார்கள் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பிறகு நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்குகிறோம் என்று கூறினார்கள் அதன் பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.