இருசக்கர வாகன கடைக்கு பூட்டு போட்டு பெண் போராட்டம்

இருசக்கர வாகன கடைக்கு பூட்டு போட்டு பெண் போராட்டம்
X
கடைக்கு பூட்டு போட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் .
கன்னியாகுமரி அருகே வாங்காத வாகனத்திற்கு தவணை கட்ட கூறியதால் ஆத்திரமடைந்த பெண் வாகன விற்பனைகடைக்கு பூட்டு போட்டு  போராட்டத்தில் ஈடுப்பட்டார்

குமரி மாவட்டம் தக்கலை அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரோஸி (50). மீன் விற்பனை செய்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன கடையிலிருந்து புதிய பைக் வாங்குவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி முன்பனமாக 50 ஆயிரம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் பைக் டெலிவரி தருவதாக கூறி அனுப்பி உள்ளனர். அதன்படி நவம்பர் மாதம் வாகனத்தை வாங்க ரோஸி சென்ற போது அவரது பெயரில் வந்த வாகனம் சரியாக இயங்காமல் இருந்துள்ளது. இதனை அடுத்து வாகனத்தை மாற்றி தரும் படி கேட்டும், சம்மந்தபட்ட நிறுவனம் காலம் தாழ்த்தியதால், தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ரோஸி மொபைலுக்கு இருசக்கர வாகனத்திற்கான கடன் மாத தவணை ஜனவரி 3ஆம் தேதி கட்டும் படி மெசேஜ் வந்துள்ளது. ரோஸி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் மிரட்டியாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஸி புதிய பூட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு, கடையை பூட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடம் வந்த போலீசார், ரோசிக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி கூறி, காவல் நிலைய அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story