மது விற்பனை செய்த பெண்கள் கைது
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊரல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவாளந்துறை கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டுவந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் திருவாளன் துறை, வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தமிழ்செல்வி வயது - 40 மற்றும் அதே ஊர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி ஜெயம் வயது.59, ஆகியோர்க தங்களது வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை விற்பனை செய்த இரண்டு பெண்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து , தமிழ்ச்செல்வி என்பவரிடம்- 30 பாட்டில்கள், ஜெயம் என்பவரிடம் 6 பாட்டில்கள் என 180 மில்லி அளவுள்ள 36 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்,
மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தனசேகரன் வழிகாட்டுதலின்படியும் வ.களத்தூர் காவல்நிலைய வட்ட காவல் ஆய்வாளர் பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த இரண்டு பெண்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 - என்ற எண்னை தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என காவல் துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.