பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியில் பொங்கல் விழா நிறைவை முன்னிட்டு ஊர் நலனுக்காக பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடைபெற்றது
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியில் பொங்கல் விழா நிறைவை முன்னிட்டு ஊர் நலனுக்காக பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடைபெற்றது .
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியில் பாரம்பரியமாக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர் மக்களும் சிறப்பாக வாழ ஒவ்வொரு வருடமும் அனைத்து வீடுகளிலும் முளைப்பாரி போட்டு காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இதனடிப்படையில் காளியம்மன் கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி காளியம்மனை பூஜித்து ஊர் மக்கள் வீடுகளில் போட்டு வைத்திருந்த முளைப்பாரிகளை, கோவிலில் இருந்து குடகனாறு ஆற்றில் கொண்டு சென்று கரைத்து ஊரின் ஒற்றுமைக்கும் ஊரின் நன்மைக்கும் சேர்ந்து வழிபட்டனர்.
Next Story