பருத்தி பயிரிடும் பணியில் பெண் தொழிலாளர்கள்
பருத்தி பயிரிடும் பணியில் தொழிலாளர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் தற்பொழுது கோடை சாகுபடியான உளுந்து, பயிறு, பருத்தி, உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
திருக்கடையூர், செம்பனார்கோவில், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, கிடங்கல், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் முடிந்து வயலில் பருத்தி விதை விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்களில் விதையானது முளைத்து 50 நாட்களில் பருத்தி பூ பூக்க ஆரம்பிக்கும், 100 நாட்களில் பருத்தியை பறிக்க ஆரம்பிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பிக்கையாக உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே பருத்தி விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.