மரக்கன்றுகள் நட்டு பெண்கள் சாதனை

மரக்கன்றுகள் நட்டு பெண்கள் சாதனை

 லாடனேந்தலில் குறுங்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

லாடனேந்தலில் குறுங்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

லாடனேந்தலில் 2017ம் ஆண்டு 100 நாள் திட்டத்தின் கீழ் நர்சரி அமைத்து திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு மர கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரகன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு கண்மாய், ஊரணி, வரத்து கால்வாய்களில் நட்டு வைத்தனர். கன்றுகள் உற்பத்தி செய்த பெண்கள் லாடனேந்தலிலும் மரங்கள் வளர்க்க திட்டமிட்டு பழம் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மூலிகை மரங்கள், அழகுக்காக பயன்படுத்தப்படும் மரங்கள் என தனித்தனியாக பனிரெண்டு ஏக்கரில் 2016 மரக்கன்றுகளை நடவு செய்து 2017 முதல் வளர்த்து வருகின்றனர்.ஆரம்பத்தில் கண்மாய் உள்ளிட்டவற்றில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து மரங்கள் வளர்த்த நிலையில் பின் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சி உள்ளனர்.

மற்ற இடங்களில் வளர்ப்பது போல் அல்லாமல் தகுந்த இடைவெளி விட்டு மரங்களை அடிக்கடி கவாத்து செய்து தோப்பு போன்று மரங்களை முறையாக வளர்த்துள்ளனர். 12 ஏக்கரில் மரம் வளர்த்து பாதுகாத்த நிலையில் பெண்களின் ஆர்வம் கண்டு கூடுதலாக மரங்கள் வளர்க்க அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனையடுத்து லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், பொது மயானம் உள்ளிட்ட இடங்களிலும் மரங்களை வளர்க்க துவங்கி இன்று வரை லாடனேந்தலில் மட்டும் 3,340 மரங்கள் வளர்த்துள்ளனர். இதனால் கோடையில் ஊட்டி, கொடைக்கானல் போன்று ரம்மியமான சூழல் நிலவுகிறது

Tags

Next Story