அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினம் - கருப்பாடை அணிந்து மௌன போராட்டம்

அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினம் - கருப்பாடை அணிந்து மௌன போராட்டம்

அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தை ஓட்டி கருப்பாடை அணிந்து மௌன போராட்டம்

தி.மலையில் அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தை அனுசரித்து பெண்கள் இணைப்புக்குழுவினர் கருப்பாடை அணிந்து மௌன போராட்டம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா அருகில் அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தை அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சார்பில் கருப்பாடை அணிந்து மௌன போராட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த மெளன போராட்டத்துக்கு திருவண்ணாமலை பெண்கள் இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். சுமதி தலைமை தாங்கினார். இதில் பெண் உரிமைகள் மனித உரிமையாக மதிக்கப் படவேண்டும், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் மகளிர் உரிமைத்தொகை அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், 2005 குடும்ப வன்முறை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மணிப்பூர் போரில் அதிக வன்முறைக்கு பாதிக்கப்படுவது பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவே அவர்கள் மீதான வன்முறையை உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ,பாகுபாடின்றி கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு போன்றதுறையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கை தடை செய்ய வேண்டும் 50 சதவித இடஒதுக்கீடு பெண்களுக்கு எல்லாதுறைகளிலும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைளை வலியுறுத்தி மௌன போராட்டத்தில் பெண்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் இணைப்புக் குழுவை சேர்ந்த ஜோஸ்பின்ராஜா, மகாலட்சுமி, மல்லிகா உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story