மகளிர் தின ஓவியக் கண்காட்சி!
உலக மகளிர் தினத்தையொட்டி இந்தியாவின் தலைசிறந்த பிரபல பெண் ஓவியர்கள் வரைந்த ஓவிய கண்காட்சி ஊட்டியில் துவங்கியது.
உலக மகளிர் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சாலமோன் ஆர்ட் கேலரி வளாகத்தில் 5 நாட்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி துவங்கியது. இந்த ஓவிய கண்காட்சியில் இந்தியாவின் தலைசிறந்த 30 பெண் ஓவியர்கள் பங்கேற்று பிரம்மாண்டமான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஓவியமும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்த ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. இன்று துவங்கிய இந்த ஓவிய கண்காட்சி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. 10 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை மதிப்பிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது பெண் சுற்றுலாப் பயணிகளின் உருவங்களை ஓவியர்கள் அவர்கள் கண் முன் வரைந்து மகளிர் தின பரிசாக வழங்கினர்.
Next Story