குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டம் 

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை சுகந்தி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகர் சித்ரா பங்கேற்று, மகளிர் தினவிழா குறித்து நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவியர் நடத்திய மகளிர்தினவிழா வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை சித்ரா துவக்கி வைத்தார்.

இவர் பேசியதாவது: பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பெண்ணின் முக்கியத்துவம் இன்றியமையாதது. ஒரு ஆட்சி அமைவதும், அமையாமல் போவதும் பெரும்பாலும் பெண்கள் தீர்மானிக்கும் முடிவில்தான் உள்ளது. அதனால்தான் அரசியவாதிகள் பலரும் பெண்களுக்கு உதவியாக பல திட்டங்கள் கொண்டு வருகிறார்கள். ஒரு பெண் கல்வி கற்றால், அவள் குடும்பத்துக்கே உதவும் என்பார்கள். தாய் நாடு, தாய்மொழி,

என பெண்களுக்கு என்றும் முதலிடம் தான். பெண்ணாக பிறந்தது குறித்து பெருமைப்பட வேண்டும். பெண்ணாக பிறந்து பல சாதனையாளர்கள் பல வரலாற்று சாதனைகள் படைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியை ஹெலன், தன்னார்வலர்கள் சித்ரா, ஜமுனா விடியல் பிரகாஷ், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story