ஆத்தூர் : நரசிங்கபுரம் நகாட்சியில் மகளிர் தின விழா
மகளிர் தின விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக அகில உலகப் பெண்கள் தினம் மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் சங்க தலைவி பார்வதி அனைவரையும் வரவேற்றார். ஆத்தூர் வட்டார சங்கத் தலைவி அன்னக்கிளி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் ராமு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்காளர்களாக இருக்கும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
வருகின்ற தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நேர்மையாக நடத்திட வேண்டும், பெண்களுக்கான உரிமை தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் மீது துரித நடவடிக்கை எடுத்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பாண்டிச்சேரியில் பெண் குழந்தை மீது நடந்த வன்முறையை கண்டிக்கின்றோம், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர். கவிதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.