பசும்பொன் புனித ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மகளிர் தின விழா

பசும்பொன் புனித ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மகளிர் தின விழா

பட்டமளிப்பு விழா 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் கமுதி அருகே பசும்பொன் பகுதியில் இயங்கி வரும் புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று யு கே ஜி மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தும்முசினம்பட்டி பங்குத்தந்தை மரியதுரை தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கமுதி பங்குத்தந்தை அருள்சந்தியாகு, கமுதி வட்டார இல்லந்தேடிக் கல்வி ஒருக்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, கடலாடி வட்டார இல்லந்தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி விழாவும் நடைபெற்றது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரவேற்புரை யாற்றினர். மாணவிகள் தங்கஜீவிதா மற்றும் ஷாஸ்லின் ரியா ஆகியோர் நன்றியுரை யாற்றினர். இந்நிகழ்ச்சிமுழுவதும் மாணவி பத்மஸ்ரீ, மாணவன் ஆண்டன்ரியான் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story