ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டம்

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ரோட்டரி சங்கம் அரங்கத்தில் உலக மகளிர் தின விழா வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது.
தர்மபுரி ரிசோர்ஸ் சென்டர் சொசைட்டி, தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா ரோட்டரி சங்க அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு எலைட் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிராம வங்கி உதவி பொதுமேலாளர் ஹேமலதா, சிந்து தீபக், வேதாபாலாஜி, கீதாசுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் பெண்களின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடந்தது. சிறந்த மகளிர் குழுக்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பெண்கள் குழந்தைகள் கலை நிகழ்ச்சி கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது விஜயசங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story