கல்லூரியில் மகளிர் தின விழா

கல்லூரியில் மகளிர் தின விழா

 கெங்கராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கெங்கராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கெங்கராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் கனி மொழி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, இந்த உலகில் இன்னும் சமத்துவமின்மை உள்ளதால் சில இடங்களில் பெண்கள் தமது கல்வி, வேலை மற் றும் திருமணத்துக்காக போராட வேண்டிய அவலநிலை இருப்ப தாக கூறினார். போராட்டங்களை சந்திக்கும் பெண்கள் மகிழ்ச்சி யோடு இந்நாளை கொண்டாடும் தருணம் விரைவில் வரும் என அவர் தெரிவித்தார்.

விழாவையொட்டி முகத்தில் ஓவியம் வரைதல், பாட்டுப் போட்டி, யோசனைப் போட்டி மற்றும் குப்பையில் புதை யல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றிபெற்றவர்க ளுக்கு. பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி தலைவர் கே.வி.ராஜா, செயலாளர் சிவராம் அல்வா, பொருளாளர் விமல் மற்றும்முதல்வர், துணை முதல்வர், அனைத்துத்துறை தலைவர் கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை ஜெபஸ்டின் சோனியா ஜாஸ் ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story