ஒன்றிய சேர்மன் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்
மகளிர் தினம்
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் தலைமையில் பெண் கவுன்சிலர்கள் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரே நிறத்தில் புடவை அணிந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தை ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று கவுன்சிலர் கூட்டத்திற்கு வந்திருந்த யூனியன் சேர்மன் உட்பட அனைத்து பெண் கவுன்சிலர்களும் ஒரே நிறத்தில் புடவை அணிந்து வந்து இருந்தனர்.
மேலும் கூட்டத்திற்கு பின்னர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேர்மன் மற்றும் பெண் கவுன்சிலர் கள் உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு யூனியன் சேர்மன் மற்றும் பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் பெண் கவுன்சிலர் ஒருவர் திமுகவின் சாதனைகள் மூலம் சக பெண் கவுன்சிலர்களுக்கு வாழ்த்து மடல் வாசித்தது அங்கு இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.