நகராட்சி, விடியல் ஆரம்பம் சார்பில் மகளிர் தினவிழா
குமாரபாளையம் நகராட்சி, விடியல் ஆரம்பம் சார்பில் சர்வேதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சர்வேதேச மகளிர் தினத்தையொட்டி, நகராட்சி நிரந்தர மகளிர் தூய்மை பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள், அலுவலக மகளிர் பணியாளர்கள் சுமார் 120 பேருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பானை உடைத்தல், லெமன் ஸ்பூன், பாட்டிலில் கைகளால் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தியதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நடந்தது. பரிசுகளை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வழங்கி வாழ்த்தினார். இதில் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா, கவுன்சிலர்கள் கனகலட்சுமி, ஜேம்ஸ், அம்பிகா, விஜயா, உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் வள்ளி, கலைவாணி, சுப்பிரமணி, மாதேஸ்வரன், ஞானசேகரன் செய்திருந்தனர். விடியல் ஆரம்பம் சார்பில் தெற்கு காலனி இல்லம் தேடி கல்வி மையத்தில் நடந்த மகளிர் தினத்தையொட்டி, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண் சாதனையாளர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விடியல் பிரகாஷ், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வல்ர்கள் கோகிலா, சேகர், கோமதி, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags
Next Story