நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா
வக்கீல் சங்க மகளிர் தின விழாவில் பேசிய மாவட்ட நீதிபதி
நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மகளிர் தின விழாவில் மாவட்ட நீதிபதி பங்கேற்பு .
உலக மகளிர் தினம் இன்று 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் நேற்று வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரேகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி கார்த்திகேயன் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு உரையாற்றினார். அவர் கூறுகையில், - மகளிர் தினம் என்று ஒன்றை தனியாக கொண்டாட வேண்டிய தேவை இல்லை. இந்த நிலை மாறி மகளிருக்கு நிறைவான உரிமை பெற்ற சூழல் உருவாக வேண்டும். அப்படிப்பட்ட நிலை உருவாக இது போன்ற விழா ஒன்று இதழாக இருக்கும். மகளிர் சமய உரிமை பெற்று வாழ மகளிர் தின வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை நீதிபதி சிவசக்தி வாழ்த்துரை வழங்கினார். மற்றும் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், தாயுமானவர், சுந்தர காமேஷ் மார்த்தாண்டன், முருகன், அலிமா, மணிமேகலை, விஜயலட்சுமி ஆகியோர் பேசினார். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story