கள்ளிக்குடியில் பெண்கள் முற்றுகை போராட்டம்

கள்ளிக்குடியில் பெண்கள் முற்றுகை போராட்டம்

பெண்கள் போராட்டம்

கள்ளிக்குடியில் நூறு நாள் வேலை திட்டத்தை அனைவருக்கும் வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை , 6 கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலையை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்க கோரி முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எம் .புளியங்குளம், தென்னமநல்லூர் , குராயூர், மொச்சிகுளம், மாசவநத்தம், எஸ். பி.நத்தம் , மேலப்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஒருதலை பட்சமாக வழங்குவதாகவும் , பணிகளை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்க கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 100 நாள் வேலை திட்ட பணிக்கான நிதியை அதிகாரிகள் விதிமுறையை மீறி , மாற்று வேலைகளுக்கு பயன்படுத்துவதால் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியதுடன், அனைவருக்கும் வேலை வழங்கிட உத்தரவிடாவிட்டால் , மற்றும்100 நாள் வேலை திட்டத்தின் அடையாள அட்டையை ஒட்டுமொத்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பிக் கொடுக்கும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story