கரசங்கால் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பெண்கள் கோரிக்கை

கரசங்கால் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பெண்கள் கோரிக்கை
மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பெண்கள் கோரிக்கை
கரசங்கால் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

கரசங்கால் ஊராட்சிக்குட்ட பகுதியில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சிதிலமடைந்து, பல ஆண்டுகளாகியும் சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது, அப்பகுதி பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, கரசங்கால் ஊராட்சி. இப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே பெண்கள் பயன்பாட்டிற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்திற்குள் கழிப்பறை, குளியலறை, மின்மோட்டாருடன் கூடிய நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவற்றுடன் கட்டப்பட்டது.

தற்போது, பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ளது. மேலும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக மாறியுள்ளது. எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Tags

Next Story