"வாக்களிப்பது குறித்து மகளிர் குழு விழிப்புணர்வு"

X
விழிப்புணர்வு
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில் கோலங்களை வரைந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்ட அலுவலகம் உள்ளது. லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு கோலம்போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, உதவி மகளிர் திட்ட அலுவலர் அம்பிகாபதி தலைமை வகித்தார். வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் நத்தாநல்லுார் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியம் பழவேரி ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மகளிர் குழுவினர், 'ஓட்டளிப்பது என் கடமை' என, பல்வேறு விதங்களில் கோலமிட்டு அசத்தினர். இதை, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வருகை புரிந்த மக்கள், ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்."
Next Story
