ராமநாதபுரம்: மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் தனபால்,எம் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர் முதலில் அரசாணை 66 ஐ ரத்து செய்திடவும் தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர்ந்து நடத்திடவும் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர் பணி வழங்கிடவும் பணி பாதுகாப்பு வழங்கி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் வலியுறுத்தி ஏராளமான மீனவ பெண்கள்கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Tags

Next Story