மகளிர் குழுக்கள் கடைகள் பெற விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் வாடகைக்கு விடப்படும், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் புல்லலை கோட்டை சாலையில் அமைந்துள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் இரண்டு கடைகள் காலியாக உள்ளது.
மேலும் மேற்படி கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள்,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திட்ட இயக்குனர், தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
