மகளிர் சுய உதவிக் குழு தலைவி வாய்க்காலில் விழுந்து தற்கொலை

மகளிர் சுய உதவிக் குழு தலைவி வாய்க்காலில் விழுந்து தற்கொலை

மகளிர் சுய உதவிக் குழு தலைவி தற்கொலை 

திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் கடன் வாங்கி கொடுத்தவர்கள் திரும்ப செல்லுத்தாததால் மகளிர் சுய உதவிக் குழு தலைவி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுக்காவிற்கு உட்பட்ட மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி வயது 50. இவர் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றிற்கு தலைவியாக இருந்து வந்ததாகவும், நிறைய‌ பெண்களுக்கு குழு மூலம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் அந்த கடனை வசூலித்து திருப்பி கட்ட‌ முடியாமல் வீட்டில் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் செல்லும் பிஏபி கால்வாயில் தற்கொலை செய்வதற்கு குதித்துள்ளார். இதனை அடுத்து‌ சுமார் 12 மணி அளவில் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கும் காங்கேயம் காவல் நிலையத்திற்கும் திருப்பூர் சாலையிலிருந்து சென்னிமலை சாலையின் இடையே வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதந்து வந்த உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து காங்கேயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story