வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியேற்ற மகளிர் சுய உதவி குழுவினர்

ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை, மகளிர் சுய உதவி குழுவினர் எடுத்துக் கொண்டனர். .

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் இதில் பங்குபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திருமாந்துறை ஊராட்சியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில், தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story