கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெண்கள் தீர்த்தகுட ஊர்வலம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தகுடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்க்கக்குட ஊர்வலம் நடைபெற்றது இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட ஊர்வலம் நடைபெற்றது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 24ஆம் தேதி மகா கணபதி யாக பூஜை உடன் தொடங்கிய நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவிநாசியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலமானது இன்று நடைபெற்றது. இதற்காக கடந்த சனிக்கிழமை அவிநாசியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தலைக்காவேரி சென்ற நிலையில் அங்கு தீர்த்தம் எடுத்து இன்று அதிகாலை அவிநாசி வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளின் வழியாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக் கூட ஊர்வலத்துக்கு முன்னதாக மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட பெண்கள் தீர்த்துக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வந்தடைந்த தீர்த்தர்கள் கும்பாபிஷேகத்தன்று அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

Tags

Next Story