பகிங்ஹாம் கால்வாயில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

பகிங்ஹாம் கால்வாயில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
பகிங்ஹாம் கால்வாய் புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
பகிங்ஹாம் கால்வாய் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில், கூவத்துார் அடுத்த பரமன்கேணியில், பகிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பு குறுக்கிடுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலை தடத்திற்காக, நீர்பரப்பில் பாலம் அமைக்கப்பட்டு பயன்பட்டு வருகிறது. க

டந்த 2018ல், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையாக, இத்தடம் மாற்றப்பட்டதால், இச்சாலை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. பழைய பாலம் குறுகியதாகவும், பலமிழந்தும் உள்ளது. அதேபோல், நீளமான அபாய வளைவுடன் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை ஒட்டியே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாம் உள்ளது.

வளைவின் துவக்க, இறுதிப் பகுதிகளை வளைவின்றி நேரடியாக இணைக்கும் வகையில், பழைய பாலத்தின் மேற்கில் புதிய பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி, 600 மீ., பாலம் அமைக்க, தற்போது பணிகள் நடந்து வருகின்றன.

Tags

Next Story